News18 Tamil Nadu @News18TamilNadu 19.04.2026 18:02 Скопировать Пожаловаться விஜய்யின் அரசியல் பஞ்ச் டயலாக்... 'சிங்கா' பட டீசர்! https://tamil.news18.com/videos/entertainment/singha-movie-teaser-out-with-vijay-political-punch-and-wife-lover-drama-nw-mma-ws-bl-2086007.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram News18 விஜய்யின் அரசியல் பஞ்ச் டயலாக்... மனைவி - காதலி இடையே சிக்கித் தவிப்பு... 'சிங்கா' பட டீசர்! கயல் சந்திரன் நடித்துள்ள 'சிங்கா' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராஜ துரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’. இதில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பைக் கொண்டாடும் குடும்பக் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. மனைவி - காதலி இடையே சிக்கித் தவிக்கும் கணவன் பார்வையில் காட்சிகள் காட்டப்படுகின்றன. டீசரின் இறுதியில் விஜய்யின் அரசியல் பஞ்ச் டயலாக் இடம்பெற்றிருக்கிறது. அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைப்பில் உருவாகியுள்ள சிங்கா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 177
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram